காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராக்கெட்களை வீசியுள்ளது. 7 மாடி வணிக வளாக கட்டடம் மீது குண்டு வீசியதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. தீவிரவாதிகளை குறித்தே தாக்குதல் நடத்தி வருவதாக கூறும் இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முன்னதாக 12 மாடி கட்டடம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் அக்கட்டத்தில் செயல்பட்ட தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கோலான் ஹைட்ஸ் பகுதியில் சிரியா 5 ராக்கெட் குண்டுகளை வீசியதில் அது தரைவெளியில் விழுந்தது என்று இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தத்தை கொண்டுவர எகிப்து போராடி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தை முற்றிலுமாக தோல்வியடைந்தது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எகிப்து வலியுறுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply