பிரித்தானியாவை சேர்ந்த 80 வயதான விதவை மூதாட்டிக்கு வந்த கடிதத்தில், தான் இறந்ததாக இரங்கல் செய்தி இருந்ததை கண்டு மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.
இந்த மூதாட்டிக்கு ஸ்டாண்டர்ட் லைப் நிறுவனம் (Standard Life) ஒய்வு ஊதியம் வழங்கி வந்துள்ளது.
ஆனால் கடந்த யூன் மாதம் இவருக்கு அனுப்பிய ஒய்வு ஊதியம் திரும்பி வந்ததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், மூதாட்டி இறந்ததிற்கு மிகவும் வருந்துவதாகவும், ஒய்வு ஊதியம் அவருக்கு கிடைக்காததால் தற்போது நிறுவனத்தை தொடர்பு கொண்டு திரும்பி பெற்று கொள்ளும் படியும் எழுதியிருந்தது. இதனை படித்த மூதாட்டி அதிர்ச்சியில் உரைந்துள்ளார்.
இதுகுறித்து தற்போது ஸ்டாண்டர்ப் லைப் நிறுவனம் கூறுகையில், இதற்கு மிகவும் வருந்துவதாகவும், மூதாட்டிக்கு உடனடியாக ஒய்வு ஊதியம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக அவருக்கு பூச்செண்டுகளும், 50 பவுண்ட்ஸ் அதிகமாக அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply