பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தனது நாயின் தலையை பக்கெட்டில் முக்கி ஐஸ்
பக்கெட் சவால் செய்ய வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாயை குளிர்ந்த தண்ணீரில் தலையை முக்கி ஐஸ் பக்கெட் சவால் செய்ய வைத்துள்ளார்.
இதனால் தற்போது இவர் மீது விலங்குகள் தடுப்பு மையம் நடவடிக்கை எடுக்க உள்ளது.
இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்த காணொளியில், இளைஞர் ஒரு பக்கெட் முழுவதும் குளிர்ந்த தண்ணீரை வைத்து விட்டு, அதில் தனது நாயை முக்கியுள்ளார்.
மேலும் அந்த காணொளியில் இளைஞர் கூறியதாவது, எனது நாய் ஐஸ் பக்கெட் சவால் செய்யப் போவதாகவும், இதே போன்று பிற நாய்கள் மற்றும் பூனைகளுக்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த இளைஞர் இவ்வாறு ஒரு விலங்கினை கொடுமைப்படுத்தியதால் விலங்குகள் நலவாழ்வு மையங்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விலங்குகள் வதை தடுப்பு மையத்தின் செய்தியாளர் கூறுகையில், விலங்குகளை கொடுமை படுத்துவது கண்டிக்கதக்கது என்றும் ஐஸ் பக்கெட் சவால் ஒரு நல்ல காரியத்திற்காக செய்து வருவதாகவும், அதனை இழிவுபடுத்தும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஐஸ் பக்கெட் சவால் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ பார்க்கலாம்....
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...


No comments:
Post a Comment
Leave A Reply