நாடு முழுவதிலும் சட்டவிரோத ஆயுதங்களைத் தேடி, தேடுதல் வேட்டை நடத்தப்பட
உள்ளது. காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை உறுதி செய்துள்ளார்.
பாதாள
உலக்குழுக்களினால் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள துப்பாக்கிக் கலாச்சாரத்தை
இல்லாதொழிக்கும் நோக்கில் இவ்வாறு சட்டவிரோ ஆயுதங்களை மீட்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைகள், கொள்கைள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய மாதங்களில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் காவல்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் ஆயுதக் குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்தும் நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியும் அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்hளர்.

No comments:
Post a Comment
Leave A Reply