பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் வேறு வழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து பீர் குடித்து விட்டு நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார்.
‘அம்மா என்னை பாருங்கள்...நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள். ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும் வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 19, 2014
ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply