blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, July 7, 2014

கச்சத்தீவு உடன்படிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசு மீள்பரிசீலனை செய்யும் - பீ முரளிதர்

கச்சத்தீவு உடன்படிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசு மீள்பரிசீலனை செய்யும் -பீ முரளிதர்கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மை குறித்து மத்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கட்சி விவகாரங்களுக்கு பொறுப்பாகவுள்ள பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பீ முரளிதர் ராவ்வை மேற்கோள்காட்டி த ஹிந்து  இதனைத் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்னவென ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் நேற்று   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான வியடம் தீர்க்கப்பட்ட ஒன்றென சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் எழுத்து மூலம் அண்மையில் தெரிவித்திருந்ததது.

எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமும் மாநிலத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் சரியான முறையில் கையாளப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சி கருதுவதாகவும் இந்த எழுத்துமூல அறிவிப்பு குறித்து மத்திய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முரளிதர் ராவ்   கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி முழுமையான அர்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு தனிப்பட்ட விடயமாக கருதப்படமாட்டாது எனவும் மீனவர்களின் நலன்களில் பாரிய கவலையை ஏற்படுத்தும் விடயங்களின் ஒரு பகுதி எனவும் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பீ முரளிதர் ராவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►