இலங்கையைச் சேர்ந்த தவிஷ பீரிஸ் ஐக்கிய இராச்சியத்தில், ஷெபீல்ட் பகுதியில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.இவரைக் கொலை செய்ததாக 18 வயதான காசிம் அஹமத் என்பவர் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பப் பட்டதாரியான தவிஷ பீரிஸ், தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றிருந்தார்.
பீசா விற்பனையில் பகுதி நேரமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கொலை செய்யப்பட்டு காயங்களுடன் விநியோக வாகனமருகில் கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இரண்டு திருட்டு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இளைஞரான காசிம் அஹமத், தவிச பீரிஸ் கொலை வழக்கிலும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொலை இடம்பெற்ற அதே திகதியிலேயே திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply