பீகாரில் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான,
ஐக்கிய ஜனதா தளம் அரசு உள்ளது. இந்த அரசில் அமைச்சராக உள்ள வினய் பிகாரி
செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் பள்ளி ஒன்றுக்கு சென்ற போது, அங்கு இரு மாணவர்கள், மொபைல் போனில், ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டேன்.
பள்ளிகளில், உயர்வகுப்பில் படிக்கும் மாணவர்கள், விலை உயர்ந்த மொபைல் போன்கள் வைத்திருக்கின்றனர்.
அந்த மாணவர்கள், ஆபாசமான குறுந்தகவல்களையும், பரிமாறிக் கொள்கின்றனர். எனவே, பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை விதிக்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவதை தடுக்க, கல்வித் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். மொபைல் போனால் நன்மைகள் இருந்தாலும், அதனால் தீமைகளும் உள்ளன.
இணையதள இணைப்பு வசதியுள்ள மொபைல் போன்களை வைத்திருக்கும் மாணவர்கள், தேவையற்றவைகளை பார்த்து, தங்களின் மனதை கெடுத்துக் கொள்கின்றனர். மொபைல் போன் என்பது, சுய பாதுகாப்புக்காக, தனிநபர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்குவது போன்றது.
சுய பாதுகாப்புக்காக, வழங்கப்பட்ட துப்பாக்கிகளை, கிரிமினல் வேலைகளுக்கு பயன்படுத்துவது போல, மாணவர்கள் தவறான செயல்களுக்கு, மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.
அத்துடன், அசைவ உணவு சாப்பிடுவது, மனிதனின் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. சைவ உணவு சாப்பிட்டால், மனமும், உடலும் பரிசுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நாட்டில் பாலியல் சம்பவங்கள் பெருக, மொபைல் போன் பயன்பாடு மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளதே காரணம். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply