அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசவுக்கும் இடையில் குறுகிய நேர சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு நேற்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றதன் உறுதிக்கடிதத்தை ஒபாமாவிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் ஒபாமாவும் காரியவசமும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply