ஹட்டன் – நோட்டன் பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்வதற்கான
விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.தமது மகள் நேற்றுமுன்தினம் பாடசாலையை விட்டு, வீடு திரும்பியபோது இளைஞரொருவர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து, சந்தேகநபரான இளைஞன் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply