இதுவரை 50 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் குழாய் மூலம் இறக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், இன்று முதல் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத் தினூடாக எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களாக நீடித்த எரிபொருள் தொடர்பான பிரச்சினையை யடுத்து, கொழும்பு துறைமுகத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் உள்ள மிதவையை பார்வையிட ஊடகவியலாளர் குழுவொன்று நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டது. இதன்போது, கப்பலில் இருந்த மிதவையூடாக மசகு எண்ணெய் இறக்கப் படுவதை காணக்கூடியதாக இருந்தது. அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டார். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மசகு எண்ணெய்யை கரைக்கு எடுத்து வருவது தொடர்பான பிரச்சினையினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை பாவனையாளர்கள் மீது திணிக்கமாட்டோம். எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக தகவல்கள் பரப்பப்பட்டபோதும் அதில் எதுவித உண்மையும் கிடையாது. எரிபொருள் கையிருப்பில்
என்ன பிரச்சினை வந்தபோதும் பெற் றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்கும்.
கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால் மிதவையை திருத்தும் பணி கள் தாமதமடைந்தன. பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மிதவை திருத்தப்பட்டு கப்பலில் இருந்து மசகு எண்ணெய் இறக்கப்படுகிறது.
மசகு எண்ணெய் ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. எந்த ஒருகப்பலும் திருப்பி அனுப்பப்பட வில்லை. மூன்று கப்பலிலும் தலா 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் எடுத்துவரப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த மிதவையில் ஏற்பட்டுள்ள கோளாறும் திருத்தப்படுகிறது. இதனூடாக டீசல் மற்றும் பெற்றோல் என்பனவற்றை இறக்க முடியும். இதனை திருத்தும் வரை சுத்திகரிக்கப்பட்ட எரி பொருள் துறைமுகத்திலுள்ள களஞ்சியத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிதவையிலுள்ள குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் முன்பு பயன்படுத்திய நல்ல நிலையிலுள்ள வேறுகுழாயொன்றை பயன்படுத்தியே மசகு எண்ணெய் இறக்கப்படுகிறது. புதிய குழாய்கள் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதோடு 1 1/2 மாதத்தில் அவை கிடைக்க உள்ளன. கப்பல்கள் பலவாரம் நங்கூரமிட்டுள்ளதால் தாமத கட்டணம் செலுத்த நேரிடும்.
முதுராஜவெல சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கோளாறும் திருத்தப்படுகிறது.
மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு லோ சல்பர் மற்றும் ஹைசல்பர் எண் ணெய் மீள வழங்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply