ஆக்கிரமிப்பு
தாவரமான பாத்தீனியத்தை வடமாகாணத்திலிருந்து ஒழிக்கும் திட்டத்தின் ஒரு
அங்கமாக இன்று முதல் ஒரு கிலோகிராம் பாத்தீனியத்தை 10 ரூபா என்ற ரீதியில்
கொள்வனவு செய்ய மாகாண விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இதற்கமைய பாத்தீனியம் கொள்வனவு செய்வதற்காக 12 மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
பாத்தேனியம் செடிகள் வளர்ந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக அடுத்த வருடம் முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply