இலங்கையின் ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய படகொன்று இறுதியாக எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே அவுஸ்திரேலிய கரையோரத்தை அடைந்திருந்ததாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"எமது கொள்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகினறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தி எம்மிடம் உள்ளது. ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய இலங்கைப் படகு எட்டு மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளது. இது மிகப் பெரிய வெற்றியாகும். இது இலங்கையின் ஒத்துழைப்பின்றி மேற்கொள்ள முடியாத ஒரு விடயம். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் எமக்கிருந்த தொடர்பு குறித்து நாம் நன்றி கூறுகின்றோம். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டமை குறித்து பெருமையடைகின்றோம். இந்த வலயத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment
Leave A Reply