blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 9, 2014

ஒன்பதாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ரபாயல் நடால்


ஒன்பதாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ரபாயல் நடால்பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  வெற்றிப்பெற்ற உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெய்னின் ரபாயல் நடால் ஒன்பதாவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.


க்ரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் பிரான்ஸின் பெரிஸில் நடைபெற்றது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் ரபாயல் நடால் மற்றும் சேர்பியாவின் நொவெக் ஜொக்கோவிச் ஆகியோர் மோதினர்.

மூன்று மணித்தியாலங்கள் 31 நிமிடங்கள் வரை நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை ஆறுக்கு மூன்று  என்ற கணக்கில் ஜொக்கோவிச் தனதாக்கிக் கொண்டார்.

எனினும் திறமையாக விளையாடிய நடால் அடுத்த மூன்று செட்களையும் 7க்கு 5, 6க்கு 2 மற்றும் 6 க்கு 4 என கைப்பற்றி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதேவேளை ரபாயல் நடால் பிரென்ஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரை தொடர்ச்சியாக வெற்றிக் கொண்ட 5 ஆவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►