
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து:-
“13 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தி அதிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முதலமைச்சர்கள் பிரச்சனையல்ல ஆனால் ஆளுநர்களுக்கே பிரச்சனை உள்ளது. தெற்கில் உள்ள ஆளுநர்களுக்கு முதலமைச்சர்களுடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் இந்த முரண்பாடு தொடர்ந்தும் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு ஆளுநர்கள் தமக்குள்ள அதிகாரங்களை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது. இதனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதில் சிக்கல் நிலையே காணப்படுகின்றது. ஒய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகளையே ஆளுநர்களாக நியமிக்கின்றனர். தெற்கில் அந்த நிலை குறைவாகும். இதற்கான காரணம் தெரியவில்லை.”
No comments:
Post a Comment
Leave A Reply