
யாழ். வரும் வியட்நாம் தூதுவர் குழு இன்றும் நாளையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகளை சந்திப்பார் எனத் தெரிகின்றது.
இன்று திங்கட்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கும் ரொன் சிங் தங் நாளை செவ்வாய்கிழமை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் குழுவினர் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கேட்டறிந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply