
இந்தத் தாக்குதலை தலிபான் இயக்கத்தில் இருந்து அண்மையில் பிரிந்து சென்றதாக கூறப்படும் தெரீக் - இ - தலிபான் (Tehreek-e-Taliban Pakistan) என்ற அமைப்பே நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
கராச்சி விமான நிலையத்துக்குள் 10 தீவிரவாதிகள் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஐந்து மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த கடும் தாக்குதலில் 23 பேர் வரை கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
அத்துடன் அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட பொதுமக்களில் ஈரானில் இருந்து வந்த 'ஷியா' இனப் பிரிவு யாத்ரீகர் குழுவின் 20 பேர் அடங்குவதாகத் தெரிகிறது.
எனினும் இந்தத் தகவல்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது விமான நிலையத்தில் சடலங்களை இனங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானில் பெரும் பதற்றம் நீடிப்பதுடன், சகல முக்கிய நகர்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply