இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, குழுவின் விவரங்களை, ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு முறைப்படி அறிவித்துள்ளார்.விசாரணைக் குழுவின் விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்தவாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு தொடர்பான இலங்கை அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 26வது அமர்வில், வெளியிடப்படவுள்ளது.
ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply