பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து திருடர்களை கைது செய்யும் புதிய செயற்றிட்டம் ஒன்றினை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாணத்தில் திருட்டுக்கள் அதிகரித்து காணப்படுவதால் அதனைக் குறைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினராகிய நாமும் செயற்பட்டு வருகின்றோம் என வடமாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ஜே.கே.ஆர்.ஏ . பெரேரா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
அதன்படி பொலிஸாருடன் எமது படையினரும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றினை நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் 40 இடங்களில் பொலிஸாருடன் இணைந்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த செயற்றிட்டத்தில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.
நேற்றைய தினம் ஸ்ரான்லி வீதியில் வீதிச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்துமாறு சைகை காட்டினோம்.
எனினும் குறித்த நபர் நிறுத்தாது வேகத்தை அதிகரித்தார். சந்தேகத்தில் 2கிலோ மீற்றர் துரத்திச் சென்று சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டி ஒன்றில் கைத்தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது அது திருடப்பட்ட கைத்தொலைபேசி என்பது தெரியவந்தது. உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதேபோல் நாவற்குழி பகுதியில் பாரவூர்தி ஒன்றினை சோதனையிட்ட போது திருட்டு துவிச்சக்கர வண்டி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே தொடர்ச்சியாக எமது நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. யுத்தம் முடிந்த பின்னரும் வீதிச்சோதனைகள் நடாத்தப்படுகின்றன என மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் இதனால் பொதுமக்களுக்கே நன்மை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply