புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அண்மையில் மடு பிரதேசத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை கொண்டு வந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் ஒருவர் என தெரியவந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
மேலும் கைதான சந்தேகநபர் வசமிருந்து டி.என்.டி வகை வெடி பொருட்கள் சுமார் 15 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தப்பிச் சென்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தப்பியோடிய சந்தேகநபர் புலிகளால் குண்டுகள் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றி அறிந்தவர் எனவும் கைதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் புலிகளால் புதைக்கப்பட்ட குண்டுகளை தோண்டி எடுத்து அதனுள் உள்ள டி.என்.டி ரக வெடிபொருட்களை மீனவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைது செய்வதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
புலி உறுப்பினர் என கூறப்படும் சிறில் நிலங்க ஜீட் அன்ரனி(வயது 28) என்பவர் தொடர்பிலேயே பொலிஸார் தகவல் கோரியுள்ளனர்.
மன்னார் மடு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே மேற்படி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இச்சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0112451636 மற்றும் 0112451634 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 9, 2014
புலிகளுடன் தொடர்புடைய முன்னாள் புலி உறுப்பினர் தப்பியோட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply