
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களும் யாழ். பண்ணை பகுதியிலுள்ள கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்போது யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் சமுகமளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களை இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆழ்கடல் மீன் பிடிப் பயிற்சி மற்றும் உயர் ரக படகுகளை கொள்வனவு செய்வதற்கு மானியம் வழங்குவதன் மூலம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த திட்டம் வெற்றியளிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தேவைப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கை மீனவர்கள் மீது தமிழக மீனவர்களுக்கு கரிசனை உள்ளதாகவும் இரு நாட்டு அரசுகள் மற்றும் மீணவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு மீனவரக்ளினதும் நலனை காக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply