திருகோணமலை கடலில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய சிறுவன் ஒருவனை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், திருகோணமலை கோயில் வீதியைச் சேர்ந்த சிறுவனே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
15 வயதான சிறுவன் நண்பர்கள் சிலருடன் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட திருகோணமலை உயிர் பாதுகாப்பு பொலிஸார் சிறுவனை காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply