புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாமென வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
காங்கேசன்துறை முதல் புத்தளம், காலி மற்றும் பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும்.
இக்கடல் பிரதேசத்தில் அடிக்கடி கொந்தளிப்பு ஏற்படலாம். எனவே இப்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply