இலங்கை
– இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் மீண்டும்
ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம்
தெரிவிக்கின்றது.இம்முறை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தீர்மானமொன்றை பெற்றுகொள்வது சாத்தியமற்றது என்பதனால், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.
இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கை மீனவர்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
தற்போது சுமார் 90 இலங்கை மீனவர்கள் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒரிஸா மாநிலங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply