வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டது. இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் பள்ளிவாசல் தலைவர்களும் நகர்ப் பகுதியில் நடத்தினர்.
இவர்கள் ஊர்வலமாகச் சென்று வவுனியா பஸ் நிலையத்துக்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்த முற்பட்டனர்.
இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, 'வவுனியாவில் அனைத்துச் சமுகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் விரும்பினால் கடைகளைப் பூட்டி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.
பொது இடங்களில் கூடி குழப்பம் விளைவிக்க வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார். அத்துடன், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர் பணித்தார். இதனால் அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
வவுனியாவில் கதைவடைப்பு; கண்டனப் பேரணிக்குப் பொலிஸ் தடை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply