நுவரெலியா
மாவட்டத்தில் தொடர்ந்தும் கடுங் காற்றுடன் கூடிய நிலைமை காணப்படுவதால்
மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கடுங் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் நேற்றைய தினம் மூவர் காயமடைந்ததாகவும், வீடுகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.
பொது இடங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் மரங்கள் காணப்படுமாயின் அதுதொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும், அரச செலவில் அவற்றினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தென்மேல் பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்து காணப்படுவதால், நாட்டிலும், விசேடமாக மத்திய மலைநாட்டில் பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply