அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்தின்
பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அமைதியின்மை
மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
தவிர்த்துக்கொள்ளுமாறும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பி செயற்பட
வேண்டாமெனவும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை,
கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடைய 50
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு என்பன
தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply