
இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அடுத்தடுத்துச் சென்ற இரு டிப்பர் வாகனங்களுக்கு இடையில் இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சிக்கி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் இளைஞர்களும் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் .
யாழ்ப்பாணம், ராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த உதயராசா விதுசன் (வயது 21), சிவானந்தராசா ஜேமஸ் நெல்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கிளிநொச்சிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment
Leave A Reply