மொனோ ரயில் சேவைக்கான பாதையமைத்தல் மற்றும் தரிப்பிடங்கள் அமைப்பதற்கான காணிகளை பெற்றுக்கொள்ளும் ஆரம்பகட்டப் பணிகள் தொடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மொனோ ரயில் சேவையை அமைப்பது பற்றி ஐனாதிபதி திட்டங்களை தயாரித்து முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்து ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் புதிய வீதிகள் உருவாக்கப்படாமையால் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளன. எனவே மாற்றுப் பாதைகள் இரண்டை அமைப்பது பற்றிய திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக கொழும்பில் காணப்படும் வாகன நெரிசலை குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே நேரம் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரங்களில் கொள்கலன் தாங்கிய வண்டிகளை கட்டுப்படுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply