
திவுலப்பிட்டிய , ,குடகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த
துசித வீரசிங்க என்பவரின் வீட்டின் மீது நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்
பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29 ம்
திகதி தனது விட்டின் முன் பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல்
பிரச்சார உருவப் படமொன்றை வைக்க முயன்ற நபர்களுக்கு தான் எதிர்ப்பு
தெரிவித்ததாக துசித வீரசிங்க தெரிவித்தார்.
நேற்று
அதிகாலை 2.00 மணியளவில் தனது வீட்டுக்கு வந்த திவுலப்பிட்டிய பிரதேச
சபையின் தலைவர் இந்திக்க அனுருத்த உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த 15
ஆதரவாளர்கள் தன்னை மிரட்டியதாக துசித்த வீரசிங்க தெரிவித்தார்.
இது தங்களது
அரசாங்கம் என்றும், தாங்கள் விரும்பும் இடங்களில் ஜனாதிபதியின் கட்
அவுட்களை வைக்க முடியுமென்றும் திவுல்பிட்டிய பிரதேச சபயின் தலைவர்
தன்னிடம் மிரட்டியதாக துசித்த வீரசிங்க கூறினார்.

இதற்கு
யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதேன்று மேலும் எச்சரித்த அவரும்
அவருடன் வந்தவர்களும், வீட்டில் இருந்து வெளியே வந்த தனது இரு சகோதரர்களை
தாக்கியதாகவும் கூறினார் துசித்த வீரசிங்க.
இது சம்பந்தமாக பொலிசாருக்கு
புகார்களை சமர்ப்பித்துள்ள போதிலும் சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்
படவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
தாக்கப்பட்ட
நபர்கள் திவுலப்பிட்டிய அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு
பாதுகாப்பு கருதி தம்பதெனிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பதிவு செய்யப்பட்ட
ஒன்பதாவது தேர்தல் வன்முறை சம்பவம் இதுவென தேர்தல் கண்காணிப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply