எவரையும் பழிவாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதுவரை நான் அப்படி நடந்து கொண்டதும் இல்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
ஊடக முக்கியஸ்தர்களைச் சந்தித்த ஜனாதிபதி கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றிபெற்றால் எதிர்க் கட்சியினரை பழிவாங்குவீர்கள் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே?
என்னுடைய அரசியல் வரலாற்றில் நான் யாரையும் பழிவாங்கியதில்லை. இனியும் யாரையும் பழிவாங்கப் போவதுமில்லை.
சந்திரிகாவின்
காலத்தில் சேவையில் இணைக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தான்
இப்போது என்னுடன் பணியாற்றுகின்றனர்.
அலரி மாளிகையில் தேனீர் வழங்கும்
ஊழியர்கூட சந்திரிகா அம்மையாரால் நியமிக்கப்பட்டவர்தான்.
இவ்வாறு, இரண்டு
தடவைகள் பதவியில் இருந்து பழிவாங்கலில் ஈடுபடாத நான் ஏன் மூன்றாவது தடவை
வெற்றி பெற்ற பின்னர் பழி வாங்கலில் ஈடுபட வேண்டும்?
2002 இல்
ரணிலின் ஆட்சிக்காலத்தில் கடுமையான பழிவாங்கல் இடம்பெற்றது.
இது சம்பந்தமாக
5000 க்கும் மேற்பட்ட கேள்விகளை பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறேன். இது
எனது கடந்தகால அனுபவம். நான் மூன்றாவது தடவை வெற்றி பெற்றதும் எவரையும்
பழிவாங்கவே மாட்டேன்.
No comments:
Post a Comment
Leave A Reply