சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
கைதான சந்தேகநபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply