blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, June 24, 2014

சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி படுகொலை

சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி போராளிகளால் சுட்டுக்கொலை!ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.


ஈராக்கில் சுன்னி முஸ்லிம்கள் ஆதரவு அமைப்பான அல் கைதா தீவிரவாதிகள், சுன்னி முஸ்லிம்களுடன் இணைந்து, அந்நாடின் அரசுக்கு எதிரான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல முக்கிய நகரங்கள், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வீழ்ந்த வண்ணமாக உள்ளன. தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில் சதாம் ஹுசைன் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட செய்தியில், இரசாயன குண்டுகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர்.

தீர்ப்பளித்த அடுத்த ஆண்டே தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனவும் அடைக்கலம் தருமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் 2007 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►