blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 23, 2014

கண்டியில் பொதுபலசேனா மனவுறுதிப் பூஜை; முஸ்லிம்களைத் தாக்கும் மற்றொரு ஏற்பாடா??

கண்டியில் பொதுபலசேனா மனவுறுதிப் பூஜை; முஸ்லிம்களைத் தாக்கும் மற்றொரு ஏற்பாடா?'மனவுறுதிப் பூஜை' என்ற பெயரில் கண்டியில் நாத ஆலயத்தில் நாளை கூட்டம் ஒன்றை நடத்த பொதுபலசேனா தயாராகி வருகிறார்.
அது, அளுத்கமவில் முஸ்லிம்களை தாக்குவதற்கு முன்னர் மக்களைத் தூண்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் போன்ற ஓர் ஏற்பாடே என்று கண்டிப் பகுதி முஸ்லிம்கள் அச்சமடைந்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, மீரா மக்கம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்தப் பூஜை ஏற்பாடு மேலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றது.

மேற்படி மனவுறுதி பூஜையில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் நான்கு திசைகளிலிருந்தும் வரும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொதுபலசேனா பொலிஸாருக்குக் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

மத ரீதியான பகையுணர்வைத் தூண்டும் எல்லாக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிப்பது என பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ள போதிலும், இந்த மனவுறுதி பூஜை என்ற ஒன்றுகூடலுக்கு அனுமதி அளிப்பதா அல்லது அதற்கு நீதிமன்றம் மூலம் தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதா என்பதில் பொலிஸ் தரப்புக்குள் குழப்பம் நீடிப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலிடத்தின் கருத்துக்கு அமைய இந்தப் பூஜைக்குத் தடை விதிக்கும் நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படாமல் போகலாம் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►