கண்டியில் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் இரவு நேரத்தில் நடத்தவிருக்கும் மோட்டார் பந்தய ஓட்டங்களை நிறுத்துமாறு கோரி மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ய பீடங்களின் பீடாதிபதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். புனித திருத் தந்தத்துக்கும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்குமான பாரம்பரிய மதிப்பைக் கொண்ட பிரதேசம் கண்டி என்பதை இக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இப்பிரதேசம் உலக மரபுரிமை மையங்களுக்குள் ஒன்றாகப் போற்றப்படுகின்றமையால் இங்கு இரவு நேர ஓட்ட நிகழ்வுகளை நிறுத்துங்கள் என்றும் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply