blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 7, 2014

கண்டி திகனயில் புதிய விமான நிலையம்

கண்டி திகன பிரதேசத்தில் ஓடுபாதையுடனான விமானத்தளம் ஒன்று அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாகவே விமானத் தளங்கள் அனைத்தும் உள்ளன. மலையகப் பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு விமான தளமும் கிடையாது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்து மலையகப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் ஊடாக உள்ளுர் விமான சேவைகளை மேம்படுத்தி பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் நன்மையளிக்கும் நோக்குடன் விமானத் தளங்கள் விஸ்தரிக்கப்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டும் வருகிறது. நாட்டிலுள்ள சகல விமான தளங்களுக்குமான வான் போக்குவரத்து வசதிகளை சிவில் விமான சேவைகள் அதிகார சபையே மேற்கொண்டு வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை விமான ஓடு பாதை உட்பட நிர்மாண பணிகளை மேற்கொண்டு வருவதுடன் விமானப் படை முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. அதன்ஓர் அங்கமாகவே திகனயில் விமான தளத்தை அமைக்கும் பணிகளை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►