ஆரம்பகால
கிரிக்கெட் வாழ்க்கையில் நான் ராஞ்சியைச் சேர்ந்தவன் என்று கூறினால், அதனை
பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்று வெளிநாட்டு வீரர்கள் அர்த்தம் கொள்வர்’
என்று சுவாரஸ்யமான தகவல்களை இந்திய கிரிக்கெட் அணி தலைவர் தோனி
தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள
கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் கழக நிகழ்ச்சியைத்
தொடங்கி வைத்து தோனி மேலும் பேசியது:
எனது அறிமுகப்போட்டிக்கு முன்,
கென்யாவில் இருந்தேன். கிரிக்கெட்டில் சதம் அடித்தபோது, எந்த ஊரைச்
சேர்ந்தவர் என்று என்னிடம் பலர் கேட்டனர்.
அப்போது, ராஞ்சி என்று
கூறியபோது, அவர்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்றே அர்த்தம் கொண்டனர்.
அதற்கு அவர்கள், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், உங்கள் அப்பாவும்
அம்மாவும் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்று கூறினர்.
அப்போது
கராச்சி இல்லை, ராஞ்சி என்று அவர்களுக்கு நான் தெளிவு படுத்தினேன்.
தற்போது ராஞ்சி மைதானத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதனால்,
சர்வதேச கிரிக்கெட் வரைபடத்தில் ராஞ்சி இடம் பிடிக்கும். இங்கு
விளையாடும்போது ராஞ்சியைப் பற்றி வீரர்கள் அறிந்து கொள்வர் என்று தோனி
தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply