சீனாவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் உள்ள வீடுகளில் திடீரென
ஆயிரக்கணக்கான ஈக்கள் புகுந்ததால் அங்கு குடியிருந்த பொதுமக்கள் கடும்
அதிர்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள Chongqing Municipality என்ற பகுதியில் நேற்று
ஒரு அபார்ட்மெண்ட்டின் மேல்பகுதியில் இருந்த திறந்தவெளி வழியாக திடீரென
ஆயிரக்கணக்கான ஈக்கள் படையெடுத்து வீட்டினுள் வந்ததால் கடும் அதிர்ச்சி
ஏற்பட்டது.
உடனடியாக வீடுகளில் இருந்தவர்கள் துணியை எடுத்து முகத்தை மூடிக்கொள்வதும், கதவு ஜன்னல்களை அடைத்துக்கொண்டும் இருந்தனர். இருப்பினும் ஒருசிலர் அந்த ஈக்களிடம் மாட்டிக்கொண்டு கடும் அவதிப்பட்டனர்.
அந்த குடியிருப்பில் இருந்த ஒருசிலர் மட்டும் பூச்சிகளை விரட்டும்
மருந்துகளால் அந்த ஈக்களை விரட்ட முயன்றனர். ஆனால் ஆயிரக்கணக்கில் ஈக்கள்
வந்துகொண்டே இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதன்பின்னர்
தீயணைப்பு படையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் உடனடியாக
விரைந்து வந்து ஈக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி
அடித்து ஈக்களை விரட்டினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈக்கள் எப்படி
வந்தது என்பதே தெரியாமல் மர்மமாக இருப்பதாக அந்த பகுதிவாசிகள் கூறினர்.
சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈக்கள் தரையில் செத்துக்கிடந்தன.


No comments:
Post a Comment
Leave A Reply