blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 18, 2014

அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து இன்று கல்முனையில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து கல்முனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுசந்தை, அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடின் காணப்படுவதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

வீதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை இடம்பெறுகின்றது கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்க அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை அழைப்பு விடுத்திருக்கிறது.

இதேவேளை, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மீது கல்முனைக்குடிப் பகுதியில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►