இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அமெரிக்கா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இவ்வாறு நிஷாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் உள்ளடங்குவதுடன், குழுக்கான தலைமைத்துவத்தை அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன வகிக்கின்றார்.
இந்த சுற்றுப் பயணத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெணான்டோ அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply