பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி
செய்ய 980 ஆசிரியர்களை நியமிக்க, கல்வி அமைச்சு துரித நடவடிக்கைகளை
மேற்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஊவா மாகாண கல்வித்துறையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் வகையில் ஊவா
மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
மேற்படி வழங்கப்படும் ஆசிரிய நியமனங்களில் 250 பேர் ஊவா மாகாண பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்.
ஊவா மாகாண தேர்தலுக்கு முன்னதாக மேற்படி நியமனங்கள் வழங்கப்படும். அந்நியமனங்கள் நிபந்தனையொன்றினடிப்படையில் அமையும்.
ஆசிரிய நியமனங்கள், பட்டதாரிகளுக்கே வழங்கப்படல் வேண்டுமென்பது
கொள்கையொன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால், மலையக
பெருந்தோட்டப் பகுதிகளை பொறுத்த வரையில் பட்டதாரிகளை தெரிவு செய்வதில்
பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விடயத்தில்
சலுகையடிப்படையில் தளர்வொன்றினை ஏற்படுத்த ஆலோசித்துள்ளேன்.
இதனடிப்படையில் மேற்படி விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றினை
தயாரித்து நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்து ஆசிரிய
நியமனங்களுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வேன் என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply