எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, June 4, 2014
வௌ்ளம் மற்றும் மண்சரிவு; 25,000 பேர் பாதிப்பு
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
களுத்துறை, காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
மழையினால் களுத்துறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக களுத்துறை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் மேஜர் சஞ்ஜீவ சமரநாயக்க தெரிவித்தார்.
இதனால் களுகங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ளநிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக அவர் கூறினார்.
களுத்துறை மாவட்டத்தில் 4,602 குடும்பங்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால், 14 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் களுத்துறை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கிங் கங்கை சில பகுதிகளில் பெருக்கெடுத்துள்ளதால், தவலம, தெனியாய மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுவதாக காலி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் நேற்று மாலை வரை தொடர்ச்சியாக பெய்த மழை தற்போது சற்று ஓய்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மலையகத்திலும் பாதிப்பு
நுவரெலியா, ஹட்டன் பகுதிகளில்பலத்த மழையினால் இடம்பெயர்ந்த 74 குடும்பங்கள் 02 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.எச்.முதித்த மஞ்சுள கூறினார்.
லக்ஸபான நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாக அவர் கூறினார்.
மலையத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் மழையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
மஸ்கெலியா பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர் கூறினார்.
ஆறு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, நாட்டில் ஆறு மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய தொடர்ந்து அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் தலைவர் ஆர் எம் எஸ் பண்டார தெரிவித்தார்.
விசேடமாக களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, மத்துகம மற்றும் களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே இந்தப் பகுதிகளிலுள்ள மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.
வடக்கில் சீரான வானிலை
ஆயினும், வடக்கு, கிழக்கில் தற்போது தெளிவாக வானிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply