blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 18, 2014

இந்தோனேசிய கப்பல் மூழ்கியது; இந்தோனேஷிய பிரஜைகள் 61 பேரை காணவில்லை

இந்தோனேஷியப் பிரஜைகள் 97 பேரை  ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மலேசியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூழ்கியுள்ள நிலையில், குறைந்தபட்சம் 61 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தவர்களில் சட்டவிரோத குடியேற்றவாசிகளான  பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக மலேசிய  கடலோர அமுலாக்க முகவரகத்தின் பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு மீட்புக் கப்பலொன்று சென்றுள்ளதுடன், மேலும் 02 கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மலேசியாவில் வேலை செய்துகொண்டிருந்த இந்தோனேஷியப் பிரஜைகள் இக்கப்பலில்  இருந்துள்ளனர். இவர்கள் முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் பெருநாளையொட்டி தற்போது மலேசியாவுக்கு திரும்புவதற்கு முயற்சித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►