blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 13, 2014

கைகளை பிடித்தவாறு பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள் (VIDEO)


கைகளை பிடித்தவாறு பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள் (VIDEO)அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள், கைகளை பிடித்தவாறு   பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜில்லியன் (Jillian ) மற்றும் ஜென்னா (Jenna) என பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டை சகோதரிகளின் பிரசவம் ”Monoamniotic birth” எனப்படும் மிக அரிதான பிறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசவம் முடிந்து குழந்தைகளை தூக்கியபோது குழந்தைகள் கைகளை இறுக்கிப் பிடித்தவாறு இருந்தமை வைத்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

”இவர்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்கள்” என அவரது தயார் Sarah Thistlethwaite குறிப்பிட்டுள்ளார்.

10,000 இரட்டை பிறப்புக்களில் ஒன்றுதான் இவ்வாறு நிகழும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குழந்தைகளின் தாய் கருத்து வெளியிடுகையில், தனக்கு கிடைத்த, மறக்கமுடியாத அன்னையர் தின பரிசு என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►