blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 13, 2014

உண்மையை சொல்லுங்கள்: புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம் செய்து, இங்குள்ள உண்மையான நிலைமைகளை உங்களின் நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு புதிய தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் தூதுவர்கள் தங்களுடைய நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் வைத்து கையளித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைகக்கான தூதுவர்கள், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை மக்கள் தொடர்பிலான  நற்செய்திகளையும் அடிமட்ட நிலைமைகளையும் தமது நாடுகளில் தலைவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியேமால் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான கொங்கோ தூதுவர் பிலிக்ஸ் நகோமா ( வாசஸ்தலம் புதுடெல்லி), ஆர்ஜன்டீன தூதுவர் ராகுல் இக்னாசியோ குவாஸ்டாவினோ ( வாசஸ்தலம் - புதுடெல்லி) தென் கொரியா தூதுவர் சாங் வேங் சாம், பிலிப்பைன்ஸ் தூதுவர் வின்சேன்டி விவியன்சியோ டி பண்டில்லோ  ( வாசஸ்தலம் டாக்கா), பாலஸ்தீன தூதுவர் சுஹைர் அஹமடல்லா சாஹிட், எல்- சல்வடோர் தூதுவர் கில்ஹெரிமோ ரூபியோ பன்நெஸ் ( வாசஸ்தலம் புதுடெல்லி) ஆகியோரே தங்களுடைய நியமனக்கடிதங்களை நேற்று கையளித்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►