blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 13, 2014

வெசாக் தினங்களில் விசேட பாதுகாப்பு; கடமையில் 30,000 பொலிஸார், விசேட பஸ் சேவைக்கும் ஏற்பாடு


வெசாக் தினங்களில் விசேட பாதுகாப்பு; கடமையில் 30,000 பொலிஸார், விசேட பஸ் சேவைக்கும் ஏற்பாடுவெசாக் தினங்களில் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதற்காக 30,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

போக்குவரத்து தவிர, வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பௌத்த கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வெசாக் நிகழ்வுகளை பார்வையிடச் செல்பவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விசேடமாக வாகனங்களில் பயணிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும், மதுபோதையில் வாகனம் செலுத்த சாரதிகளை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாமெனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விசேட பஸ் சேவை:

வெசாக் தின நிகழ்வுகளை பார்வையிட வருகைதரும் பொதுமக்களின் வசதி கருதி விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.

வெசாக் தினத்தில் இருந்து ஒருவார காலத்திற்கு இந்த விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் எச்.எம்.எ.சந்திரசிறி சுட்டிக்காட்டுகின்றார்.

வெசாக் பௌர்ணமி தினத்தில் இருந்து விஹாரைகளுக்கு வழிபாடுகளுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் வெசாக் அலங்கார பந்தல் உள்ளிட்ட வெளிச்சக்கூடுகளை பார்வையிட செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விசேட பஸ் சேவைகள்  நாளாந்தம் மாலை ஆரம்பிக்கப்பட்டு நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் எச்.எம்.எ.சந்திரசிறி கூறினார்.
நீண்ட வாரஇறுதி காரணமாக அதிகளவிலான மக்கள் சொந்த இடங்களுக்கு செல்லக்கூடும் என்பதால், புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தில் பஸ்களில் அதிக கூட்டம் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதி கருதி அதிவேக வீதியிலும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►