blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 13, 2014

மாணவி மீது இளைஞன் திடீர் தாக்குதல்

யாழ்.திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது நேற்று இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

மாணவி பாடசாலை முடிந்து திருநெல்வேலி பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை வீதியின் வழியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த இளைஞன் மாணவியினை இடை மறித்துள்ளான்.

அதேவேளை குறித்த மாணவி நிற்காமல் சென்றதினையடுத்து மாணவியின் துவிச்சக்கர வண்டியினை இழுத்து மாணவியினைத் தடுத்து நிறுத்தி மாணவியின் கன்னத்தில் அறைந்ததுடன் துவிச்சக்கரவண்டியின் காற்றுக்களையும் திறந்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளான்.

தொடர்ந்து இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தமையினையடுத்து பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►