வடக்கு ரயில் மார்க்கத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.குருநாகல் – பொத்துஹெர ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தினால் சேதமடைந்த ரயில் மார்க்கத்தை புனரமைத்தல் மற்றும் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இன்று முற்பகல் பயணிக்கவிருந்த தூர சேவை ரயில்களின் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் நிலையம் குறிப்பிடுகின்றது.
அதன் படி யாழ்தேவி, தேசத்திற்கு மகுடம் உட்பட மூன்று ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply