blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 1, 2014

தொழிற்சங்கங்களின் தலையீடு யாழ். மாநகர சபையில் அதிகரிப்பு

யாழ்.மாநகரசபையில் தொழிற் சங்கத்தின் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய நடவடிக்கைகளைக் கூட முன்னெடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
 மாநகர சபையின் சிறிய வேலைகளை முன்னெடுப்பதற்கும் தொழிற் சங்கங்கள் தலையிட்ட வண்ணம் உள்ளன. இதனால் அத்தியாவசிய செயற்பாடுகளைக்கூட முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உண்மையில் தொழில் சங்கங்கள் இத்தகைய தலையீடுகளை ஏற்படுத்த முடியாது. ஆனால் மாநகர சபையில் இவ்வாறான நிலை காணப் படுகிறது. தொழில் நடவடிக் கைகளுக்கு இராணுவத்தை உள்வாங்கும் போது அரசியல் தலையீடு என்று கூறப்படுகிறது.

ஆனால் சபையின் ஆளணிப் பற்றாக்குறை மத்தியிலும் மக்கள் தேவை கருதி எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை தொழிற் சங்கங்கள் கருத்தில் கொள்ள வில்லை என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►