நாட்டையும் தொழிலாளர் வர்க்கத்தையும் ஊழல் மிகுந்த ராஜபக் ஆட்சியில் இருந்து மீட்டெடுக்கும் இலக்குடன் இந்த மே தினத்தில் உறுதி பூண்டு செயற்படுவோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது மேதினச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். ரணிலின் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல தரப்பட்ட இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம், இன்றைய தினம் மே தினத்தைக் கொண்டாடுகிறது.
அரச ஊழியர்களின் உரிமை மற்றும் சலுகைகளை படிப்படியாக நீக்கிக்கொண்டிருக்கும் ராஜபக்வின் ஆட்சி. மீனவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இடை நிறுத்தியுள்ளதுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரித்தான அனேகமான சலுகைகளையும் இடை நிறுத்தியுள்ளது.
ராஜபக்ஷ ஆட்சியின் தூரநோக்கற்ற முடிவுகளால் ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனேகமான தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு இவ்வாறு சுமைகளைச் சுமத்தி வரும் ராஜபக்வின் ஆட்சி எங்கள் தாய் நாட்டை வெளிநாட்டவர் களுக்கும் தமக்கு நெருக்க மானவர்களுக்கும் அடைவு வைத்துவிட்டு தமது மடியை பெரிதாக்கிக் கொண்டு வருகிறது.
ராஜபக்ஷ ஆட்சியின் போஷாக்குக்காக ஊழல், மோசடி எங்கும் நிறைந்துள்ளது. அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்ற போர்வையில் நாடு முழுவதும் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இது தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் எமது நாட்டை அவமானத்துக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்.
நாட்டையும் தொழிலாளர் வர்க்கத்தையும் இந்த ஊழல் மிகு ராஜபக் ஆட்சியிலிருந்து மீட்டெடுக்கும் இலக்கைக் கொண்ட செயற்பாடாகவே இந்த மே தினம் அமைய வேண்டும்.
தொழிலாளர் வர்க்கத்துக்கு சலுகையும் வரப்பிரசாதங்களும் கிடைக்கப் பெறும் சூழலொன்றை உருவாக்க வேண்டும். நாள்தோறும் பாதாளத்தை நோக்கி நகரும் எமது நாட்டை மீட்டெடுத்து மீண்டும் நாட்டுக்கு நற்பெயரையும் செளபாக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டும். நாட்டை மீட்டெடுக்கும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து அந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இந்த மே தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் என்றுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply